பேருந்தில் இருந்து இறங்கிய முதியவர் படுகொலை… மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு.!!

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தை இறங்கிய முதியவரை மர்ம நபர் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையாளியை வலை வீசி தேடி வருகின்றனர்.

நெல்லை வண்ணாரப்பேட்டையில் மதுரை சங்கரன்கோவிலில் மற்றும் ராஜபாளையம் மார்க்கமாக வந்து செல்லும் பேருந்துகள் நிறுத்துவதற்கு பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது, அந்த பேருந்து நிறுத்தம் அருகே முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த காவல்துறையினர் இறந்த முதியவரின் உடலினை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது உடலினை ஆய்வு செய்தபோது முகம் மற்றும் பற்களில் காயங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதனை தொடர்ந்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தச்சநல்லூர் பேருந்தில் இருந்து இறங்கிய முதியவரை மர்ம நபர் ஒருவர் கழுத்தில் கை போட்டு இழுத்துச் சென்று இரண்டு வாகனங்களுக்கு மத்தியில் வைத்து அவரை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்யும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

இதனை தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த மர்ம நபர் யார்..? அவருக்கும் இந்த முதியவருக்கும் என்ன தொடர்பு..? ஏன் அந்த முதியவரை கொலை செய்தார்..? என்ற கோணத்தில் விசாரணை முடிக்கி விட்டுள்ளனர்.

Read Previous

ஜவான் திரைப்படத்தின் தமிழ் டிரைலரை வெளியிடுகிறார் நடிகர் விஜய்?; இன்ப அதிர்ச்சி தகவலால் குஷியில் ரசிகர்கள்.!!

Read Next

தண்ணீர் தேடி துள்ளி வந்த புள்ளி மான்கள்., உயிர் போன பரிதாபம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular