பேருந்தில் சொந்த ஊருக்கு சென்ற பெண் சடலமாக மீட்பு..!! என்னதான் நடந்தது..? பகீர் சம்பவம்..!!

கோவை அருகே பாலத்துறை பகுதியில் வசித்து வருபவர் கார்மேகம். இவரது மகள் மகாலட்சுமி (வயது 23). இவர் இன்ஜினியரிங் முடித்த நிலையில் சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார்.

அவர் அங்கு விடுதி ஒன்றில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மகாலட்சுமிக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. மேலும் அதற்கு அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சையும் பெற்றுள்ளார். ஆனாலும் உடல் நலம் தேரவில்லை. இந்நிலையில் மகாலட்சுமி லீவ் எடுத்துக்கொண்டு ஊருக்கு செல்ல முடிவெடுத்து தனியார் ஆம்னி பேருந்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

பின் பேருந்து நேற்று காலை கோவை காந்திபுரம் பகுதியில் நின்ற பிறகும் அவர் பேருந்தில் இருந்து இறங்கவில்லை. தனது இருக்கையில் தூங்கியவாறு இருந்துள்ளார். பின்னர் நடத்துனர் அவரை எழுப்ப முயன்ற போது அவர் எழுந்திருக்கவில்லை. மூச்சு பேச்சு இல்லாமல் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். அதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

Read Previous

தந்தையின் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மகன் சிறையில் அடைப்பு..!! ஆத்திரத்தில் பல்லை உடைந்ததால் சோகம்..!

Read Next

15 வயது மகளை 8 மாத கர்ப்பமாக்கிய தந்தை..!! நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular