சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனமும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
திருத்தணி அருகே சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கொசஸ்த்தலை ஆற்று மேம்பாலத்தில் சரக்கு வாகனமும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி இன்று (நவ. 05) விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் சுமார் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நிறுவனத்திற்கு பேருந்து சென்ற போது விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




