
- திருச்சியில் சோகம் – பேருந்து நிறுத்தத்தில் கார் மோதி விபத்து – 4 பேர் பலி.
திருச்சி மாவட்டத்தில் உள்ள விராலிமலை அடுத்த லஞ்ச மேடு சாலையில் இன்று காலை மதுரையில் இருந்து திருச்சி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது இந்தக் கார் எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அங்கு போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் இந்த விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த விசாரணையில் முருகன் என்பவரது மகன் ரவிக்குமார் உயரிழந்தது தெரிய வந்துள்ளது. மேலும், உயிரிழந்த மற்ற மூன்று பேர் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.