பேருந்தை முந்தி சென்ற பேருந்தின் முன் சக்கரம்..!! பதறிப்போன பேருந்து பயணிகள்..!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சாலையில் சென்ற கொண்டிருந்த அரசு பேருந்தின் முன் சக்கரம் திடீரென கழண்டு சென்றதால் பயணிகள் பதறினர்.ஓட்டுநரின் சாதுரியத்தால்  பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வடரங்கம் கிராமத்திற்கு A8  என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது. வழக்கம் போல அந்த பேருந்து இன்றும் இயக்கப்பட்டது. அப்போது பணகாட்டாங்குடி என்ற கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்தில் வலது புற முன் சக்கரம் கழண்டு ஓடியது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பதறி போனார்கள்,

இதை கவனித்த பேருந்து ஓட்டுனர் சாதுரியமாக அரசு பேருந்தை நிறுத்தினார், இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது. அரசு பேருந்து முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Read Previous

பெற்றோர்களே உஷார்..!! தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Read Next

அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி பறிமுதல்..!! கைரேகை நிபுணர்கள் தீவிர சோதனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular