பைட் க்ளப் படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கிய தணிக்கைக்குழு: படக்குழு அறிவிப்பு..!!

இயக்குனர் அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் நடிகர்கள் உறியடி புகழ் விஜயகுமார், கார்த்திகேயன், சந்தானம், சங்கர் தாஸ், மோனிஷா, மோகன் மேனன், அவினாஷ் ரகுதேவன், சரவணவேல் நடிப்பில் தயாராகி உள்ள திரைப்படம் தான் “பைட் கிளப்”.

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமாக விஜயகுமாரின் “ஃபைட் கிளப்” திரைப்படத்தை  தயாரித்து வழங்கப்பட்டு உள்ளது. கோவிந்த் வசந்தா இசையில் தயாராகியுள்ள இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி திரையில் வெளியாக உள்ளது.

படத்தின் “இராவண கூட்டம்” என்ற பாடல் தற்பொழுது வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தை தணிக்கை குழு கவனத்திற்கு படக்குழு அனுப்பி வைத்திருந்தது. திரைப்படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இத்திரைப்படத்தில் அதிரடி சண்டை காட்சிகள் உண்மையான நிகழ்வுகளை போல காண்பிக்கப்பட்டு இருப்பதால் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைக்க பெற்றுள்ளது.

Read Previous

வாயில் வைத்ததும் கரைந்தோடும் கேரளா ஸ்பெஷல் “பணியாரம்” ..!!செய்வது எப்படி..?

Read Next

அறுவை சிகிச்சை செய்தும் காப்பாற்ற முடியாத உயிர்..!! இன்ஸ்டா பிரபலம் 2 நாட்களில் மரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular