பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!!

பொங்கல் பண்டிகை அண்ணா கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா மற்றும் கலைஞர் நினைவு இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.அறுவடை திருநாளான பொங்கல் திருநாள் இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும் இயற்கைக்கும் உழவுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இதே போல் இன்று தை முதல் நாளை ஒட்டி தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வண்ண கோலம் இட்டு கரும்பு மஞ்சள் காய்கறிகள் உள்ளிட்டவற்றை சூரியனுக்கு படைத்து பொங்கல் இட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் என கூறி மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். தமிழகம் மட்டும் இன்றி நாடு முழுவதிலும் உள்ள தமிழர்கள் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கம் மாறாமல் வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதை அடுத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு இடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேஷ்டி சட்டை அணிந்து இருந்தது.

Read Previous

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவலர்கள் குடும்பத்தினருடன் பொங்கல் விழா கொண்டாடிய காட்சி..!!

Read Next

தோல் நோய்களுக்கு மருந்தாகும் மரிக்கொழுந்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular