பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகத் திருநெல்வேலி, தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, போத்தனூர் மற்றும் தாம்பரம் இடையே ஜன.12 முதல் 20-ம் தேதி வரை கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ள நிலையில், பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு நெரிசலின்றி பயணிக்க தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.




