
பொடுகு தொல்லை மற்றும் முடி வெடிப்புக்கு நிரந்தர தீர்வு..!! இந்த ஹேர் பேக்..!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!!
பெண்கள் அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் பொடுகு தொல்லை மற்றும் முடி வெடிப்பு போன்ற பிரச்சனைகள் இந்த பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே இயற்கையான முறையில் எந்தவிதமான சலூன் செல்லாமலும் சரி செய்யலாம் அது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
தயிரில் வெள்ளை மிளகு கொஞ்சம் போட்டு அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை என்பது உடனே நீங்கி அந்த தொல்லை இனி வராது. இதை செய்யும்போது கண்களில் படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. ஏனென்றால் கண்களில் பட்டால் எரிச்சல் மற்றும் அலர்ஜி ஏதாவது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வசம்புத்தூள் மிளகு ஓமவள்ளி இலை இவற்றால் சிறிது எடுத்து அரைத்து புளித்த மோர் ஒரு கப் எடுத்து அதில் இதை கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் பேன் மற்றும் ஈறு சம்பந்தமான தொல்லை நீங்கும். முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் சிறுவாள் மிளகு அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி வேருடன் உதிர்வதை குறைத்து புதிய முடி வளரும். உடல் சூட்டினால் முடி கொட்டுவதை தடுக்க மருதாணி இலை மற்றும் எலுமிச்சை சாறு சில துளி தேங்காய் பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தலைக்கு ஷாம்பு போட்டு குளித்த பின் இந்த கலவையை தேய்த்து வந்தால் முடி கொட்டுவது நிற்கும் கண்டிப்பாக இதையெல்லாம் ட்ரை பண்ணி பாருங்க.