
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பொதுச் சின்னங்கள் ஒதுக்கீட்டுக்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் நவம்பர் 11ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பொது சின்னத்திற்கு விண்ணப்பிக்கலாம். அடுத்த ஆண்டு மே 10ஆம் தேதியுடன் நடப்பு அரசின் ஆட்சிகாலம் முடிவடையவுள்ளதால், ஏப்ரலில் தேர்தல் நடைபெறும்.