பொதுநலன் கருதி..!! இந்த பதிவு பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு..!! அனைவரும் படிக்கவும்..!!

பொதுநலன் கருதி இந்த பதிவு பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு.. பசி என்று குழந்தை சொன்னால் உடனே உணவு கொடுங்கள் அரட்டைலோ சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள் மேல் ஆடை இன்றியும் ஆடையின்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம். எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணி விடாதீர்கள். ஒருபோதும் வாய மூடு தொண தொண என்று கேள்வி கேட்காதே என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள் யார் அழைத்தால் போக வேண்டும் யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவு படுத்துங்கள். வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள். வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும் வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது வன்முறை காதல் கொலை களவு போன்றவை நிறைந்த திரை காட்சிகளையோ நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள் தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள். தண்டிக்க நினைக்காதீர்கள் ஒரு முறை நீர் ஊற்றியவுடன் விதை மரம் ஆகிவிடாது நீங்கள் ஒரு முறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள் உங்களுக்கு பொறுமை அவசியம் குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாடி அவர்கள் உங்களை பற்றி பேசலாம். உங்கள் பெற்றோரை நடத்தும் விதம் உங்கள் பிள்ளைகளால் கவனிக்கப்படுகிறது நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம் படிப்பு என்பது அடிப்படை அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள். குழந்தைகள் கேள்வி கேட்கட்டும் அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள். பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள் தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள் ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அவசியம் அதற்கு தடை போடாதீர்கள். ஒருபோதும் உங்கள் குழந்தைகளின் எதிரில் சண்டையிடாதீர்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம். அவர்கள் ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

Read Previous

விநாயகருக்கு போடும் தோப்புக்கரணம் உருவான கதை உங்களுக்கு தெரியுமா ..??

Read Next

நல்ல ஜாதகத்தை கொண்டவர்களும் வாழ்க்கையில் ஒரு சில கட்டங்களில் கஷ்டப்படுவதற்கு என்ன காரணம்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular