பொதுமக்களை விடாத துரத்தி துரத்தி கடிக்கும் தெருநாய்கள்..!! ஐந்து பேர் படுகாயம்..!!

பொதுமக்களை விடாத துரத்தி துரத்தி கடிக்கும் தெருநாய்கள்.ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

சமீப  காலங்களாகவே தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகின்றது. பல்வேறு ஊர்களில் பொதுமக்களை கடித்து காயப்படுத்தியும் வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரியில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை பிள்ளையார் கோவில் வீதியை சார்ந்த கார்த்திகேயன், வேல்முருகன் நகரில் சிவா, டான் பஹதூர், கண்ணன், மீனா உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டவர்களை தெருநாயை துரத்தி துரத்தி கடித்து அவர்களை காயப்படுத்தி உள்ளது.

தற்பொழுது அவர்கள் அனைவரும் அதே பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக புதுச்சேரியை பொருத்தவரை கடந்த ஆண்டு மட்டும் 26,113 பேரை நாய்கள் கடித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 6,532 பேர் தெருநாய்கள் கடித்து சிகிச்சை பெற்று வருகின்றனர், இதற்கிடையே தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Read Previous

நர்மதை ஆற்றில் புனித நீராடிய ஏழு பேர் மாயம்..!! காவல்துறையினர் விசாரணை..!!

Read Next

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தடை இல்லாத வளர்ச்சி பயணம்..!! அமித்ஷா வாழ்த்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular