பொது அறிவு கொண்டவர்கள் இப்படி ஒரு செயலை செய்வார்களா?

சாலை நடுவே இப்படி சாலையை உடைத்து கொடி வைக்கும் தைரியம் இவர்களுக்கு எப்படி வருகிறது? ஆளுங்கட்சி என்றால் மாநிலத்தை விலைக்கு வாங்கியவர்களா? சிறிதளவாவது பொது அறிவு கொண்டவர்கள் இப்படி ஒரு செயலை செய்வார்களா? என்று அறப்போர் இயக்கத்தினர் கேள்வியெழுப்பியுள்ளனர். சாலையை உடைத்து மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தி கொடி வைத்து வரவேற்றால் தான் விழாவுக்கு வருவேன் என்று சொல்ல அரசியல்வாதிகளுக்கு அசிங்கமாகவே இருக்காதா? ஆளுங்கட்சியே இப்படி சட்டத்தை மீறி மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தினால் மற்ற கட்சிகள் சட்டத்தை மீறும் போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர்களை தடுக்க முடியும்? என ட்வீட் செய்துள்ளனர்.

Read Previous

24 மணி நேரத்தில் 23 பேர் மரணம்..!!

Read Next

மத்திய அரசின் மறைமுக உத்தரவால் மக்கள் குழப்பம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular