பொன்னிற மேனியை தரும் பொன்னாங்கண்ணி..!!

பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிட்டால் நமது மேனிகள் பொன்னிறமாக ஜொலிக்கும் என்று நமது முன்னோர்கள் கூறுவது வழக்கம், பொன்னாங்கண்ணி கீரை நம் வீட்டை சுற்றியுள்ள தோட்டத்திலோ அல்லது காடுகளில் கிடைக்கும், இன்றைய காலகட்டத்தில் அந்த கீரையை யாரும் விரும்பி சமைத்து சாப்பிடுவதில்லை பொன்னாங்கண்ணி கீரையை பருப்பில் வேகவைத்து கிடைத்து சாப்பிடும் பொழுது அதன் சுவை பல மடங்கு அதேபோல் நமது உடலுக்கு தேவையான புரதங்கள் அவற்றில் கிடைக்கிறது..

பெயரிலேயே பொன்னை வைத்திருக்கும் பொன்னாங்கண்ணி நலத்தை வாரி வழங்கும் தாவரத் தங்கம் என்று அகத்தியர் குணவாகடம் கூறியுள்ளார், லூபியோள் காம்பஸ்டீரால், ஸ்டிக் மாஸ்டிரால் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்துள்ள இந்த கீரையை வேகவைத்து வெண்ணெயில் குழைத்து வெறும் வயிற்றில் காலை வேளையில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் முக பூச்சிகளின் ஆதரவின்றி பளபளப்பான தேகம் மின்னும், மேலும் பொன்னாங்கண்ணி கீரையில் உள்ள அனைத்து சத்துக்களும் நமது உடலுக்கு கிடைத்துவிடும் இந்த பொன்னாங்கண்ணி கீரை நம்மை சுற்றியுள்ள காடுகளிலேயே கிடைக்கும்..!!

Read Previous

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Read Next

வல்லாரை சாப்பிட்டால் வாழ்நாள் முழுவதும் ஞாபகம் நீளும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular