பெண்கள் பொருளாதார விடுதலை பெறுவதும், இளைஞர்கள் கல்வி உரிமை பெறுவதும்தான், சமூக நீதியை நோக்கிய பயணத்துக்கான அடித்தளம். அதனால்தான், இந்த இரண்டுக்குமான திட்டங்களை பார்த்து பார்த்து செய்கிறோம். அந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டவைதான் விடியல் பயணம், மகளிர் உரிமைத் திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், இப்போது தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்கள் என தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.