போகி பண்டிகை 2025 வீட்டில் செல்வம் சேர இந்த முறை இப்படி கொண்டாடி பாருங்கள்..!!

நாடு முழுவதும் அதிகமானவர்கள் ஒன்று கூடி கொண்டாடும் விழாக்களில் ஒன்று பொங்கல் பண்டிகை. இது ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு பெயர்களில் கொண்டாடப்படும் இதன் துவக்கமாக கொண்டாடப்படுவது போகிப் பண்டிகையாகும் இது குப்பைகளை எரிப்பதற்கான நாளாக மட்டும் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்….

தென்னிந்தியாவில் அறுவடை திருநாளாக கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இதன் துவக்க நாளாக கொண்டாடப்படுவது போகி பண்டிகையாகும். அதாவது மார்கழி மாதத்தில் இறைவன நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படும் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதே போகிப் பண்டிகையாகும்….

இந்த பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது? எப்படி கொண்டாடப்பட வேண்டும் போகி என்றால் என்ன செய்தால் வீட்டில் வருடம் முழுவதும் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்..

சூரிய பகவான் ; தன்னுடைய பணத்தை தெற்கிலிருந்து வடக்கில் துவக்கும் நாளையே மகர சங்கராந்தி என்கிறோம் பழைய தீய விஷயங்களை விடுத்து வாழ்க்கையில் புதிய பயணத்தை துவங்க வேண்டும் என்பதை உணர்த்தும் நாளை போகி பண்டிகையாகும். வீட்டில் செல்வ வளம் மாற்றம் வளர்ச்சியாகியவை புதிதாக நிறைய வேண்டும் என்பதற்காக வீடுகளை சுத்தம் செய்து புதிய பயணத்திற்கு தயாராகும் நாள் போகிப் பண்டிகை ஆகும். இந்த ஆண்டு 2025-ல் ஜனவரி 13ஆம் தேதி போகிப் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது..

போகி என்பது மழையின் கடவுளான இந்திரனை வழிபடுவதற்குரிய நாள் என இந்து சாஸ்திரங்களை சொல்கின்றன. இந்த நாளில் விவசாயிகள் தங்களின் விவசாயம் செழிக்க நல்ல மழையை அருள வேண்டும் என வேண்டி கொள்வது வழக்கம். ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்க செல்வ வளங்களை நிறைவதற்கு இந்திரன் அருள் செய்யும் நாள் என நம்பப்படுகிறது. இது இந்திரனுக்கு மிகவும் பிடித்தமான நாளாக சொல்லப்படுகிறது இயற்கைக்கு நன்றி செலுத்தி அவற்றின் ஆசியை பெறும் நாளாக போகிப் பண்டிகை கொண்டாட வேண்டும்..

போகி பண்டிகை என்று வீட்டை சுத்தம் செய்து வெள்ளை அடித்து அழகிய மலர்கள் மாவிலைகள் ஆகியவற்றால் அலங்கரிக்க வேண்டும் புதிதாக விளைந்த அரிசியில் அரைத்த மாவை பயன்படுத்தி கோளமிட்டு கோலத்திற்கு நடுவே மாட்டு சாணம் பிடித்து பூவை அவற்றில் வைக்க வேண்டும் விவசாயிகள் தங்களின் விவசாய பணிக்காக பயன்படுத்தும் ஏர் கலப்பை போன்றவற்றிற்கு சந்தனம் குங்குமம் தொட்டு வைத்து வணங்க வேண்டும். சூரிய பகவானையும் பூமிதேவியையும் வணங்கி விட்டு விவசாய பணிகளை துவக்க வேண்டும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பொருட்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்..

சில பகுதிகளில் தீமூட்டி தேவையற்ற பொருட்களையும் ஆடைகளையும் எரிப்பார்கள். பெண்கள் மந்திரங்கள் சொல்லியும் பாடல்கள் பாடியும் அந்த தீயை சுற்றி வந்து வழிபடுவார்கள் நண்பர்கள் குடும்பங்கள் ஆகியவை ஒன்றிணையும் நாளாக போகி பண்டிகை இருக்கும். புதிதாக விளைந்த அரிசி பழங்கள் விளைச்சல் மூலமாக கிடைத்த படம் ஆகியவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்து அளித்து போகியை கொண்டாடும் வழக்கமும் சில இடங்களில் உள்ளது..!!

Read Previous

பொங்கலின் போது பசுவை வணங்க காரணம் என்ன அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!

Read Next

சைனஸ் நோயை குணப்படுத்த மிளகு தேநீர்..!! தினமும் ஒருமுறை குடிக்கவும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular