போக்குவரத்து மீறல் – முதல் நாளில் ரூ.12,100 வசூல்..!!

சென்னையில் வாகனங்களுக்கு புதிய வேகக்கட்டுப்பாடு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி அதிகபட்சமாக கார் 60 கிமீ, ஆட்டோ 40 கிமீ, இரு சக்கர வாகனங்கள் 50 கிமீ வேகத்திலும் பயணிக்கலாம். இதை மீறி வேகமாக பயணித்த வாகன ஓட்டிகளை Radar Gun மூலம் கண்டறிந்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இதில் முதல் நாளான நேற்று 4 கார்கள் 117 இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.12100 வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சுமாா் 62.5 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 6 சதவீத வாகனங்கள் அதிகரிக்கின்றன.

Read Previous

அமெரிக்க வெள்ளை மாளிகை முன் போராட்டம்..!!

Read Next

ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனை ஜாமின்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular