போச்சு சவுக்கு சங்கர் தான் காரணம்..!! பல்டி அடித்த ரெட் பீக்ஸ்..!! ஜேன் பெலிக்ஸின் பரபரப்பு கடிதம்..!!

பெண் காவலரை இழிவாக பேசிய சவுக்கு சங்கர் மற்றும் அவரை பேட்டியளித்த பெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோரை தமிழக சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.

சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து  கோவை மத்திய சிறையில் அடைத்துள்ள நிலையில், திருச்சி சைபர் கிரைம் காவல்துறையினர் பெலிக்ஸ் ஜெரால்ட் ஐ கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளன;. இந்நிலையில் கடந்த மே மாதம் 14ஆம் தேதி  ரெட் பீக்ஸ் அலுவலகத்தில் திருச்சி சைபர் கிரைம் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதில் சுமார் 25க்கும் மேற்பட்ட பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பெண் காவலர் குறித்து சவுக்கு சங்கர் பேசியதற்காக ஜெரால்ட் மனைவியும் ரெட் பீக்ஸ்  நிறுவன மேலாளருமான  ஜென் பெலிக்ஸ் மன்னிப்பு கோரி உள்ளார்,  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள மன்னிப்பு கடிதத்தில் “சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சில் ரெட் பீக்ஸ்க்கு உடன்பாடு இல்லை, அது ரெட் பீக்ஸின் கருத்தும் இல்லை. இருப்பினும் இந்த காணொளியால் காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் வருத்தம் அடைந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது,

கடந்த 30.04.2024 அன்று “ஒய் சவுத் மீடியா இஸ் டார்கெட்” என்ற தலைப்பில் நமது ரெட் பிளிக்ஸ் ஊடகத்தின் ஆசிரியர் பெலிஸ் ஜெரால்ட் சவுக்கு சங்கரை நேர்காணல் செய்திருந்தார். அந்த நேர்காணலில் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சை கூறிய கருத்து சவுக்கு சங்கரின் கருத்து தானே தவிர ரெட் பீக்ஸ் ஊடகத்தின் கருத்து அல்ல. பெண்களின் மாண்பையும், சுயமரியாதையும் மிக உயர்வாக ரெட் பீக்ஸ் ஊடகம் கருதுகிறது.

காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த காணொளியை ஒளிபரப்பியதற்கு ரெட் பீக்ஸ் மனம் திறந்து மன்னிப்பு கேட்கிறது. அந்த காணொளி வழக்கு நிலுவையில் உள்ளதாலும் காவல்துறை விசாரணை தேவைப்படுவதாலும் வேறு யாரும் பார்க்காத வண்ணம் பிரைவேட் செய்யப்பட்டுள்ளது”, என்று அந்த மன்னிப்பு கடிதத்தில் ஜென் பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.

Read Previous

“ஜில் ஜில்” மழைக்கு சூடான “பெப்பர் சிக்கன்” ரெசிபி இதோ..!!

Read Next

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular