கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னாண்டன் கோவில் ரோடு, அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன் மகன் செந்தில்குமார் (41). இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் தமக்கு போதிய வருமானம் இல்லை என கருதி வந்த செந்தில்குமார் அண்மைக்காலமாக மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இதையடுத்து, நேற்று (ஜூன் 27) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செந்தில்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் அறிந்த அவரது மனைவி பானு சம்பவம் குறித்து கரூர் மாநகர காவல்துறையினருக்கு புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த செந்தில்குமார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.