இன்றைய காலகட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்கள் எல்லாம் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வளரும் காலங்களில் உடலில் வலுவற்று ஆரோக்கியம் மற்றும் முறையில் தங்களின் வாழ்க்கை பயணத்தை நகர்த்திக் கொள்கின்றனர், அப்படி இருக்கும் பட்சத்தில் போதைக்கு அடிமையான குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களின் குழந்தை போதைக்கு அடிமையாகி விட்டது என்று தெரிந்தால் அவர்களை இவற்றின் மூலம் மீட்க முடியும்..
குழந்தைகள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள் என்று தெரிந்தால் உடனே அவர்களை அழைத்து அவர்களுடன் அமர்ந்து பேசுங்கள், அவர்களுடன் மனம் விட்டு பேசும் பொழுது அவர்களுக்குள்ள பிரச்சனைகளை கொட்டி தீர்த்து விடுவார்கள், பிள்ளைகளின் மாற்றத்தில் சிறு வித்தியாசங்கள் தெரிந்தாலும் உடனே அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று அவர்களை அழைத்து கேளுங்கள், மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உடனே அவர்களை அணுகி அவர்களுக்கு தேவையானவற்றை தருவதனால் அவர்கள் மனதாலும் உடலாலும் ஆரோக்கியம் அடைவார்கள், போதை பழக்கங்கள் முற்றிருந்தால் மனநலம் அல்லது போதை மீட்பு மையங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கான சிகிச்சை பெற்று குணமடைந்து வருவார்கள்…!!