போதையில் புத்தாண்டு வாழ்த்து சொல்லாத நண்பனுக்கு கத்திக்குத்து..!! போலீஸ் விசாரணை..!!
கேரளாவின் திருச்சூரில் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்காத இளைஞரை நண்பர் கத்தியால் குத்திய சம்பவம் நடந்துள்ளது. கப்பா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷாபி என்பவர் ஷுஹைப் என்ற இளைஞரை கத்தியால் குத்தியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் ஷுஹைப்பை 24 முறை கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த சுஹைப் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவத்தின்போது குற்றவாளி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.