
பிரேசில் நாட்டில் போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் 9 பேர் எரித்துக் கொலை.
பிரேசில் நாட்டில் வடகிழக்கு பகுதிகளில் உள்ள பாகியா மாகாணம் சால்வடார் நகரில் போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் அந்த கும்பலைச் சேர்ந்த மர்ம நபர்கள் அக்கம் பக்கத்தில் அமைந்திருந்த வீடுகளின் உள்ளே புகுந்து அவற்றை சூறையாடியுள்ளனர். அப்போது 9 பேர் தீ வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்டனர்.
2 பேரின் உடல்கள் பகுதி அளவும் 5 பேரின் உடல்கள் முற்றிலுமாக எரிந்துவிட்டன. 2 பேருக்கு தீயால் காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விரைந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த ஆண்டில் மட்டுமே 6600 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது அந்த நாட்டில் இரண்டாவது மிகப்பெரிய எண்ணிக்கை ஆகும். இந்த எண்ணிக்கை தேசிய சராசரியை விட அதிகம் என பிரேசில் நாட்டின் பொது பாதுகாப்பு கூட்டமைப்பு என்.ஜி.ஓ அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.