போனில் ஆடர் செய்தால் வீட்டிற்கே வரும் போதைப்பொருள்..!! சென்னையில் 4 பேர் கும்பல் கைது..!!

சென்னையில் உள்ள கொருக்குப்பேட்டை உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது.

இந்த தகவலை தொடர்ந்து விசாரணையில் களமிறங்கிய காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி இருந்தார். இதனிடையே சம்பவ தினத்தன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வருகை தந்த நான்கு பேர் கும்பலை நிறுத்தி விசாரித்துள்ளனர்.

அப்பொழுது அவர்களின் கைப்பையில் இருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் அந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்றாக சேர்ந்து போதை மாத்திரை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதற்காக தனியாக ஒரு செயலி ஒன்றையும் பயன்படுத்தி வந்த கும்பல் அதில் வரும் ஆர்டர் செய்வொருக்கு டோர் டெலிவரையும் செய்து வந்தனர்.

பத்து மாத்திரைகள் கொண்ட அட்டையை ரூ.4500 க்கு வாங்கி ஒரு அட்டையை ரூ.200-க்கு  அக்கும்பல் விற்பனை செய்து வருகின்றது. போதைக்கு அடிமையான நபர்கள் இவர்களிடம் பணம் கொடுத்து போதை அட்டையை பெற்று பயன்படுத்தி வந்துள்ளன. தற்போது இந்த விவகாரத்தில் ஈடுபட்ட கணேஷ் (வயது 21), ராஜேஷ் (வயது 22), ரஞ்சித் (வயது 27), உதயகுமார் (வயது 21) ஆகியோரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Read Previous

“முத்திய பழங்கள் சாராயத்திற்கு ஏங்க, முத்தான பழங்கள் விற்கும் முந்திரி” – நெகிழவைக்கும் நிகழ்வு.!!

Read Next

#Breaking: அடுத்த 3 மணிநேரத்திற்கு தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் பெய்யப்போகும் பேய்மழை..!! மஞ்சள் & ஆரஞ்சு எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular