போன முறை உதய சூரியன்..!! இந்தமுறை தாமரை..!!

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று இதுகுறித்து அவர் கூறுகையில், பாஜக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடவுள்ளேன். பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளை பாஜகவிடம் கேட்டுள்ளோம். தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிவித்துள்ளார்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போல் பாஜகவின் தாமரை சின்னத்திலேயே இவரும் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் பாரிவேந்தர் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Read Previous

கீழடி உட்பட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூ.5 கோடி..!!

Read Next

இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: தந்தை, மகன் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular