போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் கைது..!!

சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணி புரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி கடந்த ஒரு வாரமாக ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கூட்டமைப்பு, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் ஆகிய மூன்று சங்கங்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகள் தொடர்பாக 3 நபர் குழு அறிக்கை அளித்ததும் நடவடிக்கை எடுப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதியளித்திருந்தார். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Read Previous

மோட்டார் சைக்கிளில் இருந்து தவிர விழுந்த வாலிபர் உயிரிழப்பு..!!

Read Next

அரசு மருத்துவமனைகளில் ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular