
தினமும் பயன்படுத்தும் படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணைகளை விட நமது வீட்டின் கழிப்பறைகள் தூய்மையானவை என ஒரு ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மாதம் உபயோகித்த போர்வையில் 1 கோடிக்கும் அதிகமான பாக்டீரியாக்கள் உள்ளதாக ஜேசன் டெட்ரோ என்ற நுண்ணுயிரியல் வல்லுநர் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இது நம் கழிவறை இருக்கையில் இருக்கும் பாக்டீரியாக்களை விட அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதனால் போர்வை மற்றும் தலையணை உறைகளை அடிக்கடி துவைத்து பயன்படுத்த வேண்டும்.