போலி சாவி தயாரித்து சோறுபோட்ட முதலாளிக்கு துரோகம்..!! சீர்காழியில் அதிர்ச்சி சம்பவம்.!!

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி பகுதியில் தனியார் ஜவுளி கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கடைக்கு இரண்டு கிளைகள் உள்ளது.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று இரண்டு கடைகளில் கல்லாப்பெட்டியில் இருந்தும் ரூ. 2 லட்சம் பணம் மாயமாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது மர்ம நபர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் ஜவுளி கடைக்கு வந்து கடையின் சாவியை பயன்படுத்தி கடைக்குள் வந்து பணம் திருடி சென்றது தெரிய வந்தது.

சிசிடிவி கேமரா ஆதாரத்துடன் சர்ச்சைக்குரிய நபர் குறித்து விசாரணை செய்தபோது அவர் முன்னாள் ஊழியர் முகமது பகத் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த காவல் துறை நான் நடத்திய விசாரணையில் முன்னாள் ஊழியர் ஆன பகத் பணியில் இருக்கும் போதே போலி சாவி தயாரித்து வைத்து பின் பணியில் இருந்து நின்று திருட்டு கைவரிசையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

ரிமால் புயல் எதிரொலி..!! கடலூர், நாகை துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

Read Next

மகளிர் விடுதிக்குள் புகுந்து செல்போன் திருட்டு..!! ஸ்மார்ட் போனை திருடி ஸ்மார்ட் பிசினஸ்..!! 3 பேர் கைது.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular