போலி திராவிட மாடல் அரசு..!! ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது..!! ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு எல் முருகன் கடும் கண்டனம்..!!

சென்னை பெரம்பூரில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர்  ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு  பாஜாக முன்னாள் தலைவரும் இணை அமைச்சருமான எல் முருகன் இரங்கலையும், தமிழக அரசுக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எல் முருகன் தனது எக்ஸ் தள பதிவில்  குறிப்பிட்டு இருப்பத “பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சமூக விரோத கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் இந்த செய்தியை கேட்டு நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தபோது சமூக விரோத கூலிப்படை கும்பல் வீடு புகுந்து வெட்டி அவரை படுகொலை செய்துள்ளனர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் போலி திராவிட மாடல் ஆட்சியில் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கும் மற்றும் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளராக இருப்பவருக்கும் பாதுகாப்பு இல்லை. அதுவும் சென்னை பெரம்பூர் போன்ற முக்கிய நகர்ப்புறத்தில் சமூக விரோத கும்பல் படுகொலை செய்து தப்பி ஓடுவது இந்த போலி திராவிட மாடல் திமுக அரசின் செயலாற்ற தன்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொறுப்பில் உள்ள காவல்துறையையும், உளவுத்துறையும் முற்றிலும் சீரழிந்து சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளதை இந்த படுகொலை சம்பவம் நிரூபித்துள்ளது. வேங்கய் வாயல், கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரணம் ஆகிய சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களே அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் செயலற்று நடவடிக்கை எடுக்காமல் நின்ற திமுக அரசின் மெத்தனத்தில் தொடர்ச்சி சகோதரர் ஆம்ஸ்ட்ராங்  படுகொலை வரை வந்து நிற்கிறது. போலி திராவிட மாடல்  அரசு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சமூக நீதிக்கும் எதிரானது என்பதை மீண்டும் நிறுவனமாகியுள்ளது”, என அவர் கூறியுள்ளார்.

Read Previous

ஜூலை 10 விழுப்புரத்தில் உள்ளூர் விடுமுறை..!! காரணம் இதுவா..?

Read Next

அதிக காரமான உணவை சாப்பிட்டீங்களா..? அப்ப அடுத்து கண்டிப்பா இதை சாப்பிடுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular