போலீஸ் நிலையத்தில் ஐ. டி. நிறுவன ஊழியர் தற்கொலை..!!

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தாரமங்கலம் ராமிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 25). இவர், சென்னையில் ஐ. டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையே இளம்பெண் ஒருவரது செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசி தொந்தரவு செய்வதாக செல்வம் மீது ஓமலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் செல்வத்தை விசாரணைக்கு அழைத்து வந்தனர். அப்போது அந்த பெண் தன்னை காதலித்ததாக கூறினார். அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்த போது, செல்வத்தை தனக்கு யார் என்று தெரியாது என கூறியதாக தெரிகிறது.

இதில் மனம் உடைந்த செல்வம், போலீஸ் நிலையத்துக்கு பின்புறம் சென்று தீக்குச்சியில் உள்ள மருந்தை கரைத்து குடித்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த போலீசார், செல்வத்தின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். செல்வத்துக்கு ஓமலூரில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Previous

கேரளா ஸ்டைலில் மீன் குழம்பு சாப்பிடணுமா?.. இப்படி ஒரு முறை செய்து பாருங்க..!!

Read Next

கள்ளக்காதல் – இடையூறாக இருந்த மனைவி சுட்டுக் கொலை..!! போலீசார் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular