
அசாமின் கோக்ராபார் காவல்நிலையத்தில் மைனர் சிறுமிக்கு எஸ்ஐ பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜூன் 21ஆம் தேதி அன்று, சிறுமி தனது காதலனுடன் ஓடிவிட்டதாக புகாரின் பேரில், போலீசார் மைனர் சிறுமி மற்றும் அவரது காதலனைக் கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது எஸ்ஐ பீமன் ராய் தனது ஆடைகளை கழற்றி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக உயர் அதிகாரிகளிடம் சிறுமி புகார் அளித்துள்ளார். விசாரணை நடத்திய அதிகாரிகள் எஸ்ஐ பீமன் ராயை சஸ்பெண்ட் செய்தனர்.