போஸ்ட் ஆஃபீஸின் அட்டகாசமான சேமிப்பு திட்டம் – மாதம் ரூ.9,250 வருமானம்..!!

ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வருமானம் கிடைக்கும்படியான அட்டகாசமான போஸ்ட் ஆபீஸ் திட்டம் குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 போஸ்ட் ஆபீஸ்:

வங்கிகளை காட்டிலும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் லாபத்தை வழங்குகின்றன. அந்த வகையில், குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து ஒவ்வொரு மாதமும் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும் என விரும்புபவர்கள் போஸ்ட் ஆபீஸ் MIS திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். இந்த திட்டத்திற்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் தனியாக அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும் டெபாசிட் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலமான 5 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கான வட்டியை மாத வருமானமாக பெற்றுக்கொள்ளலாம். அதே போல, திட்டம் முதிர்வடைந்தவுடன் பணத்தை பெற நினைத்தாலும் பெற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் இந்த திட்டத்தில் ரூ.9 லட்சத்தை டெபாசிட் செய்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.5,500 வருமானமும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ.9,250 வருமானமும் ஈட்டலாம். ஆனால், திட்டம் முதிர்வடைவதற்கு முன்பாகவே டெபாசிட் செய்த தொகையை திரும்ப பெற விரும்பினால் வைப்பு தொகையில் இருந்து 1% கழித்த பிறகு மீத பணம் திரும்ப வழங்கப்படும்.

Read Previous

வளர்ப்பு தந்தையால் +2 மாணவி கர்ப்பம்..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2023 – மாதம் 1 லட்சம் ஊதியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular