
உத்திரபிரதேச மாநிலத்தில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தை சார்ந்த 16 வயதுடைய சிறுமி பள்ளி முடித்து தனது சகோதரருடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.அவர்களை வழிமறித்த நான்கு பேர் கொண்ட கும்பல் சிறுமியை காட்டுக்குள் தூக்கிச் சென்று அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
அப்போது சிறுமி அவர்களிடமிருந்து தப்பிக்க கடுமையாக போராடினார் இதனால் ஆந்திரம் அடைந்த கும்பல் தங்கள் வைத்திருந்த சானிடைசரை சிறுமியின் வாயில் ஊற்றினார், இதனை தொடர்ந்து சிறுமி மயக்கம் அடைந்ததும் அவரை கூட்டு பாலியல் பலத்காரம் செய்துள்ளனர். இதை தடுக்க வந்த சிறுமியின் சகோதரியும் கடுமையாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.இதனை தொடந்து அப்பகுதி வழியாக சென்றவர்கள் சிமியையும் அவரது சகோதரனையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாய் உயிர் இழந்துள்ளார். இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையில் குற்றவாளியை தீவிரமாய் தேடி வருகின்றனர்.