ப்ளூடூத்தில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தால் விவசாயி..!! ப்ளூடூத் வெடித்து காது அவுட்..!!

சிவகங்கை மாவட்டத்தில் ப்ளூடூத் ஹெட்போனை பயன்படுத்தி விவசாயி ஒருவர் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென ப்ளூடூத் ஹெட்போன் வெடித்தது விவசாயின் காதில் காயம் ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் நாம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு முக்கியமாய் ஹெட்போன் அமைந்துள்ளது. ஆனால் செல்போன் வெடிப்பு சம்பவங்கள் நாம் கேட்டிருப்போம் தற்போது செல்போனில் பயன்படுத்தப்படும் ப்ளூடூத் ஹெட்ஃபோன்கள் மூலம்  பாட்டு கேட்டுக் கொண்டிருக்கும்போது ப்ளூடூத் ப்டூத் ஹெட் போன் வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சார்ந்தவர் பன்னீர் செல்வம் (வயது 55) இவர் தினம் தோறும் ப்ளூடூத் ஹெட்போன் மூலம் பாட்டு கேட்பதை வழக்கமாய் கொண்டுள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று தனது செல்போனை பயன்படுத்தி ப்ளூடூத் மூலம் பாட்டு கேட்டுக் கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென அவர் காதில் வைத்து கொண்டு இருந்த ப்ளூடூத் ஹெட் போன் வெடித்தது. இதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உடனே அவர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார் .அங்கு  முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கே அவருக்கு சிகிச்சை பெற்று வருகிறார். ப்ளூடூத் ஹெட் போன் மூலம் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தபோது ப்ளூடூத் ஹெட் போன் வெடித்து விவசாயி காதில் காயம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!! வானிலை ஆய்வு மையம்..!!

Read Next

நியாய விலை கடைகளில் பொருள்கள் கிடைக்காமல் திண்டாடும் பொதுமக்கள்..!! சொன்னது என்னாச்சு..? மருத்துவர் அன்புமணி ராமதாஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular