
மகனின் இறுதிச்சடங்கில் 9 குழந்தைகள் உட்பட 13 பேரை சுட்டுக்கொன்ற கடற்படை வீரர்… காங்கோ நாட்டில் பயங்கரம்.
காங்கோ நாட்டின் நையகோவா பகுதியைச் சேர்ந்த முகுவா என்பவர் கடற்படை வீரராக இருக்கிறார். இவரது மகன் திடீரென இறந்துவிட்டார். இவரது மகனின் இறுதிச்சடங்கில் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் பங்கேற்று கொண்டனர்.
அப்போது திடீரென ஆவேசமடைந்த முகுவா தன் வைத்திருந்த துப்பாக்கியால் மகன் இறுதிச்சடங்கில் பங்கேற்ற கூட்டத்தினர் மீது சரமாரியாக சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உயிருக்கு பயந்து பாலா புரமும் சிதறி ஓடினார்கள். 9 குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் முகுவா வின் இந்த செயலுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்