மகன்களின் திருமணத்தை பார்க்கும் முன்பே மறைந்த விஜயகாந்த்..!! சோகத்திலும் சோகம்.!!

தேமுதிக தலைவரும், பிரபல தமிழ் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று தனது 71 வது வயதில் உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தி உள்ளார்.

மறைந்த நடிகர் விஜயகாந்த் மக்களுக்காக பல நலப் பணிகளை செய்த காரணத்தினால் அவரின் மறைவு சொந்த வீட்டில் ஏற்பட்ட துக்கம் போல பலரின் மனதில் துக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவரின் இறுதி காலகட்டத்தில் மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன்கள் பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் உடனிருந்து அவரை கவனித்துக் கொண்டனர். இருவருக்கும் 30 வயதை கடந்தாலும் தற்பொழுது வரை திருமணமாகவில்லை.

மூத்த மகனான பிரபாகரனுக்கு தற்போது பெண்பார்க்கும் பணிகள் தொடங்கியிருந்த நிலையில் இவர்களின் திருமணத்தை பார்க்கும் முன்பே கேப்டன் விஜயகாந்த் இயற்கை எய்தி உள்ளார்,  இந்த தகவல் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Previous

விஜயகாந்தின் மறைவால் உச்சகட்ட சோகத்தில் தொண்டர்கள்..!! மொட்டை அடித்து அஞ்சலி.!!

Read Next

ஏரி மண் கொள்ளையால் துயரம்..!! ஏரியில் குளிக்கச்சென்ற 2 சிறார்கள் பரிதாப பலி.!! பெற்றோர்களே கவனம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular