கேரளா: மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (டிச., 31) திறக்கப்படுகிறது. மண்டல பூஜைக்கு பிறகு நடை சாத்தப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை மீண்டும் திறக்கப்படுகிறது. ஜன., 14ஆம் தேதி மாலை சுவாமி ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து, மகர ஜோதி தரிசனம் நடைபெறும். ஜன., 19ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும். நடப்பு சீசனில் இதுவரை 36 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.




