மகளின் மரணத்தில் இருந்து மீள வழியின்றி தவிக்கும் விஜய் ஆண்டனியின் மனைவி..!! உருக்கமான பதிவு.!!

தமிழ் சினிமா திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் விஜய் ஆண்டனி. மாறுபட்ட கதை அம்சங்கள் கொண்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். திரைப்படங்கள் மக்களிடையே கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அவர் நடிப்பில் மிகப்பெரிய அளவில் கவனிக்கபட்டார்.

இவரின் மனைவி பாத்திமா கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றது. தம்பதிகளின் அன்புக்கு அடையாளமாக மீரா, லாரா என்கின்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி பாத்திமா தம்பதியனின் மகள் மீரா எதிர்பாராத விதமாக திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் மறைவு குடும்பத்தை கடுமையாய் உலுக்கியது. அவரின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை. இந்நிலையில் பாத்திமா தனது எக்ஸ் பக்கத்தில் மகளின் நினைவுகள் தொடர்பான கருத்தை பகிர்ந்து உள்ளார்.

அந்த உருக்கமான பதிவில் ”மீரா தங்கமே உனது பியானோ உனது கைகளால் வாசிக்க நீண்ட நாட்களாக காத்துக் கொண்டுள்ளது. ஏக்கத்தில் தவிக்கின்றது. நாங்கள் இன்றளவும் நம்பிக்கையாக காத்திருக்கிறோம். நீ விரைந்து சென்றதால் உலகம் உனக்கானதாக இல்லை என நினைக்கின்றோம். ஆனால் உனது அம்மாவாக நான் இன்னும் இங்கேயே இருக்கிறேன் .வாழ்க்கை- மரணம் இடையே இருக்கும் கருத்துக்களை என்னால் புரிந்து கொள்ளவும் இயலவில்லை, நான் உன்னை சந்திக்கும் வரையில் நன்றாக சாப்பிட்டு மகிழ்ச்சியாக இரு அம்மா உன்னை நேசிக்கிறேன்”, என தெரிவித்துள்ளார்.

Read Previous

திருமண நிகழ்வில் பயங்கரம்: பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்ட தலித் இளைஞர் சுட்டுக்கொலை..!!

Read Next

11 வயது மகளுடன் பெற்றோர் தற்கொலை..!! வெளிமாநிலத்தில் அறையெடுத்து கேரள தம்பதி விபரீத செயல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular