
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக யார் யாரெல்லாம் இணைய வாய்ப்பு உள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. கூட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து தனி ரேஷன் அட்டை பெற்றவர்கள், புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள், முன்பு விண்ணப்பிக்க தவறியோர், ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டு சரியான ஆவணத்தை தாக்கல் செய்தோர், மின்சாரம் 3,600 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்துவோர், ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு கீழ் உள்ள குடும்பங்கள் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.