மகளிர் உரிமைத் தொகை கேட்டு பெண்கள் முற்றுகை..!!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் தேவராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சென்றாம்பாளையம் கிராமத்தில் வசிக்கும் தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் அப்பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பம் செய்தும் இதுவரை வழங்கவில்லை எனக் கூறி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் முறையாக பதில் அளிக்கவில்லை, எனவே தங்களுடைய விண்ணப்பத்தை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read Previous

விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல அனுமதி..!!

Read Next

தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular