முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி வருகிறது. இந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த உதவித்தொகையை ரூ.2,000 ஆக உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துள்ளார். முன்னதாக மகளிர் உரிமைத்தொகை உயர்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் ரூ.2,500 வழங்கப்படும் என அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.




