
சென்னையில் ஜூலை 24ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் செய்ய முகாம் தொடங்கும் என சென்னை மேயர் பிரியா தற்போது அறிவித்துள்ளார். திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான மகளிருக்கு உரிமைத்தொகை ஆயிரம் என்ற திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தகுதி வாய்ந்த மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தற்போது அறிவித்தது சலசலப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளரை சந்தித்த சென்னை மேயர் பிரியா, ஜூலை 24ஆம் தேதி முதல் சென்னையில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் செய்ய முகாம் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.