• September 24, 2023

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவரா நீங்கள்..?!!:அப்ப உடனே இதை செய்யுங்க..!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2021 ஆம் சட்டமன்ற தேர்தலின் போது மகளிர்க்கு உரிமை தொகையாக மாதம் தோறும் ரூபாய் 1000  வழங்கப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி அன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளின் போது தொடங்கப்படும் என்று நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த திட்டத்தில் சேர மொத்தம் ஒரு கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பி இருந்தன அவற்றில் சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம் மனுக்கள் தகுதி இல்லாதவை என்று கூறி நிராகரிக்கப்பட்டது. மீதமிருந்த ஒரு கோடியே 6,55,000 மனுக்கள் தகுதி வாய்ந்தவைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர்ளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் முறைப்படி துவங்கி வைத்தார், இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது,இ-சேவை மையங்களின் மூலம் மீண்டும் தங்கள் விண்ணப்பத்தை அளிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

Read Previous

நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்: வீடுகள்தோறும் விநாயகர் சதுர்த்தி விழா..!!

Read Next

“ஏதோ ஒரு வேலைல இருந்துகிட்டு..” பாஜக அண்ணாமலையை விமர்சித்த சின்னம்மா சசிகலா.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular