
யூபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது .இந்நிலையில் நேற்று இரவு நடைபெற்ற 13 வது லீக் போட்டியில் பெங்களூர் யுபி வாரியர்ஸ்- பெங்களூர் அணிகள் மோதியது ,இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் பேட்டிங் செய்த யூபி வாரியர்ஸ் அணி 19.3 ஓவர்களில் தனது அனைத்து விக்கெட் இழந்து 135 ரன்கள் எடுத்தது.
பெங்களூர் அணியின் சிறப்பான பந்து வீசிய ஆஷா ஷோபனா இரண்டு விக்கெட்களும் எலீஸ் பெர்ரி மூன்று விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதனை தொடர்ந்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 18 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூர் அணி மகளிர் பிரிமியர் லீக் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.