திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே, மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டார். மது போதையில் இருந்த தந்தை தனது 17 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வாக்குமூலத்தில் சிறுமி தனது தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார். அதனையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் தந்தையை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.




