மகளைக் கொன்றுவிட்டு சுற்றுலா சென்ற சைக்கோ தந்தை..!!

கொச்சி: மகளைக் கொன்று ஆற்றில் வீசிவிட்டு, சுற்றுப்பயணம் போல தலைமறைவு வாழ்க்கையைத் தொடர்ந்த தந்தைக்கு நீதிமன்றம் இன்று மதியம் தண்டனை வழங்குகிறது. 22-03-2021 அன்று, எர்ணாகுளத்தில் உள்ள முத்தர்புழாவில் நான்காம் வகுப்பு மாணவி வைகா இறந்து கிடந்தார். மகளுக்கு குளிர்பானத்துடன் விஷம், மதுபானம் கலந்துகொடுத்து கொன்று,
ஆற்றில் வீசிவிட்டு தந்தை சானுமோகன் தலைமறைவானதை போலீசார் உறுதி செய்தனர். கொலை நடந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு, கர்நாடகாவில் உள்ள கார்வாரில் இருந்து குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

மகாராஷ்டிராவில் நிதி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சானுமோகன், மகள் உயிருடன் இருந்தால், தனக்கு பாராமாகி விடுவாள் என நினைத்து இந்த குற்றத்தை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கொலை செய்த பின் கோயம்புத்தூர், பெங்களூரு மற்றும் கோவாவுக்கு சென்று தலைமறைவாக வாழ்ந்துள்ளார். கோவாவுக்கு வந்து சூதாட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கோவாவில் உள்ள ஒரு சூதாட்ட விடுதியில் மட்டும் ரூ.45,000 செலவிட்டுள்ளார். இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சானுமோகன் குற்றவாளி என எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும்.

Read Previous

ஐஓசி நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததில் இருவருக்கு காயம்..!!

Read Next

ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரை 2.0..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular