மகளை காதலித்த 17 வயது சிறுவன்..!! கொடூரமாக கொலை செய்து கிணற்றில் வீசிய தந்தை.. அதிர்ச்சி..!!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூர் காலனியில் வசித்து வருபவர் இளைய பெருமாள். இவருக்கு கோகுலகிருஷ்ணன் என்கின்ற மகன் ஒருவன் உள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குறிஞ்சிகுடி கிராமத்தில் உள்ள தரை கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதனை அவ்வழியாக சென்றார் பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல் துறைக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பரிசோதனையின் முடிவில் சிறுவனின் உடலில் ஆங்காங்கே காயம் இருப்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து யாரேனும் சிறுவனை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசி இருக்கலாம் என்று கோணத்தில் காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் கோகுலகிருஷ்ணனின் நண்பரான வாசுதேவன் என்பவர் சம்பவ தினத்தன்று அவரை வெளியே அழைத்து சென்றது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் வாசுதேவனை பிடித்து விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது, அதாவது கோகுலகிருஷ்ணன் அதே பகுதியை சார்ந்த சரவணன் என்பவரின் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை சரவணன் கண்டித்தும் கோகுல கிருஷ்ணன் தனது காதலை கைவிடாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் மற்றும் அவரது மகன்கள் நவீன் மற்றும் சூர்யா ஆகியோர் சேர்ந்து கோகுலகிருஷ்ணனை அடித்து கொலை செய்து அங்கிருந்த கிணற்றில் வீசியது அம்பலமானது, இதை தொடர்ந்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Previous

திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்திய காதலி..!! கொடூர முறையில் கொலை செய்த காதலன்..!! அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்..!!

Read Next

#Watch Video: அமேசானில் ரூ.20,000 மதிப்புள்ள சோனி ஹெட்போன் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! பகீர் வீடியோ வைரல்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular