
மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசில் துணை முதல்வராக பதவியேற்றுக் அஜித் பவார் கொண்டார். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உடனான மோதலால் அஜித் பவார் கட்சியை உடைத்தார். இந்நிலையில், தேசியவாத காங்கிரஸில் இருந்து அஜித்பவார் உள்ளிட்டோர் விலகி பாஜக கூட்டணியில் இணைந்தனர். அதன்படி, மகாராஷ்டிராவில் இன்று பாஜகவில் இணைந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். மேலும், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் அஜித் பவார் மற்றும் தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த 8 எம்எல்ஏக்களும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.