மகாராஷ்டிரா மாநிலத்தில் கள்ளக்காதலியின் மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது..!!

காதலியின் மகளை மிரட்டி ஒரு வருடத்திற்கு மேல் பாலியல் பலாத்காரம்.

கள்ளக்காதலியின் மகளை மிரட்டி ஒரு வருடத்திற்கு மேலாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்து உள்ளது. இந்த சம்பவம்.நாக்பூரில் வகோடா பகுதி. இப்பகுதியைச் சேர்ந்த ௩௭ வயது வாலிபருக்கு ஒருவர் கணவரை விட்டு பிரிந்து மகளுடன் வாழ்ந்து வந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. பின்னர் கள்ள உறவாக மாறி இருக்கிறது.

திருமணம் செய்து கொள்ளாமலேயே பின்னர் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார்கள். அப்பெண்ணின் 12 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்திருக்கிறார் அந்த வாலிபர். அந்த பெண் வெளியே செல்லும் நேரங்களில் எல்லாம் மிரட்டி மிரட்டி அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். ஒரு வருடத்திற்கு மேலாக இப்படி அந்த சிறுமி கொடுமைகளை அனுபவித்து வந்திருக்கிறார்.

வெளியே சொன்னால் தாயிடம் சொன்னால் கூட கொன்று விடுவேன் என்று மிரட்டி வந்து இருக்கிறார். மிரட்டலுக்கு பயந்து இந்த சிறுமி தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை தாயிடம் கூட சொல்லாமல் மறைத்து இருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் அந்த வாலிபரின் தொல்லை அதிகமாகவே ஆத்திரமடைந்த அந்த சிறுமி தாயிடம் சொல்லி அழுது இருக்கிறார்.

இதை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் அந்த தாய் தன் கூடவே இருந்து கொண்டு ஒரு வருடத்திற்கு மேலாக தன் மகளுக்கு இப்படி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்திருக்கிறார் என்பதை அறிந்து கடும் ஆத்திரமடைந்த அந்த பெண் போலீசில் புகார் அளித்து உள்ளார். போலீசார் அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து உள்ளனர்.

Read Previous

அரண்மனை-4 கூட்டணி உறுதி…! யாரெல்லாம் தெரியுமா…!

Read Next

மனைவி மீது கொண்ட சந்தேகத்தால் அவரின் ஆண் நண்பரை கோடரியால் 15 துண்டுகளாக வெட்டி சாக்கு பையில் கட்டி வீசி எறிந்து கணவர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular