மகாராஷ்டிரா மாநிலத்தில் 20 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம்..!!

20 மாத பெண் குழந்தை பாலியல் பலாத்காரம். பக்கத்து வீட்டு வாலிபர் சிக்கினார்.

20 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததில் குழந்தை வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே இருந்திருக்கிறது. மருத்துவ பரிசோதனையில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் போலீசார் விசாரணையில்தான் பக்கத்து வீட்டில் வசிக்கும் 35 வயது வாலிபர் தான் இந்த கொடூர செயலை செய்ததும் தெரிய வந்திருக்கிறது மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தது வருகிறார்கள் இந்த தம்பதியினர்.

தம்பதியினரின் 20 மாத பெண் குழந்தை பக்கத்து வீட்டில் வசிக்கும் 35 வயது வாலிபர் நோட்டமிட்டு வந்திருக்கிறார். பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து அந்த வாலிபர் அந்த பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதன் பின்னர் அங்கிருந்து தன் வீட்டிற்கு சென்று விட்டார் பெற்றோர் வந்ததும் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்திருக்கிறது என்ன ஏது என்று புரியாமல் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

அங்கு மருத்துவர் குழந்தையை குழந்தையை பரிசோதனை செய்துவிட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறது குழந்தை என்று சொல்லி இருக்கிறார். மருத்துவர் சொன்னதை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர் போலீசாரிடம் புகார் சொல்ல அவர்கள் வழக்கு பதிவு செய்து உள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் பக்கத்து வீட்டு வாலிபர் 20 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியாக இருக்கிறது.

இதன் பின்னர் அந்த வாலிபர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து உள்ளனர். 20 மாத பெண் குழந்தையை 35 வயது வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த அடுக்குமாடி குடியிருப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Read Previous

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே நிலத் தகராறில் பெண்ணை அடித்துக் கொலை செய்த இளைஞன்..!!

Read Next

இஞ்சி ஊறுகாய் செய்வது எப்படி..!! வாங்க பார்க்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular