
மராட்டிய மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவசேனா- பா.ஜனதா அரசில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார் துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 8 பேரும் மந்திரியாக பதவியேற்றனர். இது, மராட்டிய அரசியலில் எதிர்பாராத திருப்பமாக அமைந்தது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், “மக்களின் நலனுக்காக நான் வைத்துள்ள திட்டங்களை செயல்படுத்த மகாராஷ்டிரா முதலமைச்சராக விரும்புகிறேன். சரத் பவார் அரசியலில் இருந்து விலகி ஆசி வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.